கொரோனா தொற்றுக்குள்ளான பொது சுகாதார பரிசோதகர்!

Published By: Vishnu

25 Apr, 2020 | 12:25 PM
image

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட 416 ஆவது நபராக குறித்த பொது சுகாதார பரிசோதகர் பதிவானார்.

நேற்றிரவு மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 420 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 49 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் கண்டறியப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

இந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 65 பேர் வெலிசர கடற்படை முகாமுடன் சம்பந்தப்பட்டவை ஆகும்.

இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 கொரோனா தொற்றாளர்களில், 109 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரத்தில் இவர்களுள் 304 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 183 நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19