கொரோனா வைரஸ் குறித்து சர்வதேச விசாரணை- நிராகரித்தது சீனா

25 Apr, 2020 | 09:22 AM
image

கொரோனா வைரஸ் குறித்து சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற வேண்டுகோள்களை சீனா நிராகரித்துள்ளது.

பிரிட்டனிற்கான சீனாவின் முக்கிய இராஜதந்திரியான சென்வென் சீனா இந்த வேண்டுகோளை நிராகரிக்கின்றது என பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

சுயாதீன விசாரணைக்கான வேண்டுகோள்கள் அரசியல் நோக்கங்களை கொண்டவை,கொரோனா வைரசிற்கு எதிராக  சீனா மேற்கொண்டுள்ள போராட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்பிவிடக்கூடியவை என சென்வென் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது வைரசிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றோம்,நாங்கள் எங்கள் முழுக்கவனத்தையும் வைரசிற்கு எதிராக திருப்பியுள்ளோம் என சீன இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் ஏன் விசாரணைகள் குறித்து பேசவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் இது எஙகள் கவனத்தை மாத்திரமல்ல வளங்களையும் திசைதிருப்பிவிடும் என தெரிவித்துள்ளார்.

இது அரசியல் உள்நோக்கங்களை அடிப்படையாக கொண்டது,எவரும் இதற்கு இணங்க முடியாது,எவருக்கும் இதனால் நன்மை ஏற்படப்போவதில்லை என சீன இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17