5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு திட்டத்தில் 91 கோடியே 41 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது : மட்டு. அரச அதிபர்

Published By: J.G.Stephan

25 Apr, 2020 | 09:26 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச 5 ஆயிரம் கொடுப்பனவு திட்டத்தில் ஒரு இலச்சத்தி 82 ஆயிரத்து 826 குடும்பங்களுக்கு 91 கோடியே 41 இலச்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த பணம் வழங்கும் உதவி திட்டம் இவ்வாரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (24.04.2020) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார் .

இம்மாவட்டத்தில் வயோதிபர் கொடுப்பனவாக 15 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு 7 கோடியே 52 இலச்சத்து 55 ஆயிரம் ரூபாவும், வலது குறைந்தவர்களுக்குரிய கொடுப்பனவாக 6 ஆயிரத்து 651 குடும்பங்களுக்கு 3 கோடியே 32 இலச்சத்து 55 ஆயிரம் ரூபாவும், சமுர்த்திப் பயனாளிகள் காத்திருப்புப் பட்டியலிலுள்ளவர்கள் 1 இலச்சத்து 36 ஆயிரத்து 177 குடும்பங்களுக்கு, 68 கோடியே 8 இலச்சத்து 55 ஆயிரம் ரூபாவும் இதுவரையில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர இம்மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 23 ஆயிரத்து 422 குடும்பங்களுக்கு 11 கோடியே 71 இலச்சத்து 10 ஆயிரம் ரூபாவும், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக 248 குடும்பங்களுக்கு 12 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவும், நிவாரணம் கிடைக்கவில்லையென மேன்முறையீடு செய்த ஆயிரத்து 277 குடும்பங்களுக்கு 63 இலச்சத்து  85 ஆயிரம் ரூபாவும் நிவாரண உதவியாக  வழங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை இம்மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளால் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொதிகள் 69 ஆயிரத்தி 449 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் சுகாதாரதுறையினர், அரச திணைக்களங்க உத்தியோகத்தர்கள்  மற்றும்  உள்ளூராட்சி  மன்றங்கள் அத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47