(ப.பன்­னீர்­செல்வம், ஆர்.ராம்)

தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வுக்கு மூன்று உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்­கான நிறு­வ­னங்கள் தொடர்பில் தெளி­வற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­டாத நிலையில் இச்­சட்­ட­மூலம் முழு­வதும் பய­னற்­ற­தா­கி­விடும் எனவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று (24) வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தகவல் அறியும் உரிமை சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தகவல் உரி­மைக்­கான சட்­ட­மூ­லத்தை வர­வேற்­கிறேன். அதே­நேரம் இச்­சட்­ட­மூ­லத்தில் காணப்­படும் சில விட­யங்­களில் தெளி­வற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றன. அவற்றை சபையின் கவ­னத்­திற்கும் கொண்­டு­வ­ரு­கின்றேன். சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழுவை நிய­மிக்கும் போது அதற்கு மூன்று வகை நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்­களின் பெயர்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு பிரே­ரிக்க வேண்டும்.

ஆணைக்­கு­ழு­வுக்­கான உறுப்­பி­னர்­களின் பெயர்­களை குறித்து பிரே­ரிக்க வேண்­டிய நிறு­வ­னங்­களில் முத­லா­வ­தாக இலங்கைச் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உள்­ளது. அச்­சங்­கத்தின் மூலம் உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. அடுத்து இரண்­டா­வ­தாக காணப்­ப­டு­வது வெளி­யீட்­டா­ளர்கள், பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மற்றும் ஊடக நபர்­களின் அமைப்­புக்­களும் மூன்­றா­வ­தாக சிவில் அமைப்­புக்­களும் காணப்­ப­டு­கின்­றன.

இரண்­டா­வதும் மூன்­றா­வ­து­மாக கூறப்­பட்­டுள்ள ஒவ்­வொரு நிறு­வ­னங்கள் சார்பில் பல அமைப்­புக்கள் உள்­ள­டங்­கு­வதால் அந்­நி­று­வ­னங்கள் சார்பில் ஒவ்­வொரு உறுப்­பி­னர்­களை அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு பெயர் குறித்­து­ரைப்­பது எவ்­வாறு என்­பது தெளி­வற்­ற­தா­க­வுள்­ளது என அவர் தெரிவித்தார்.