ஈட்டியால் குத்தியது போன்று இருந்தது - எதற்காக கூறுகிறார் தினேஷ் கார்த்திக்

Published By: Digital Desk 3

24 Apr, 2020 | 07:05 PM
image

சென்னை சுப்பர் கிங்ஸ் எனக்கு பதிலாக மஹேந்திர சிங் தோனியை தெரிவு செய்தமை இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வேதனையடைந்தேன் என இந்திய கிரிக்கெட் அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவரும் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தவருமான  தினேஷ் கார்த்திக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-

முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் 2008 ஆம் ஆண்டில் நடந்தபோது, நான் இந்திய அணிக்காக அவுஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்தேன்.  தமிழகத்தின் முன்னணி வீரராக இருந்ததால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நம்பினேன். அவர்கள் என்னை அணித்தலைவராக நியமிப்பார்களா? இல்லையா? என்பது மட்டுமே எனக்குள் அப்போது எழுந்த கேள்வியாகும்.

ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக விக்கெட் காப்பாளரான தோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் எடுத்தனர். அச்சமயம் தோனி எனது பக்கத்தில்தான் (அவுஸ்திரேலியாவில்) அமர்ந்திருந்தார். தன்னை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்யப்போகிறது என்பதை என்னிடம் கூட அவர் கூறவில்லை.

ஒரு வேளை அவருக்கு முன்கூட்டி தெரியாமல் இருந்திருக்கலாம். சென்னை அணி நிர்வாகம் எனக்கு பதிலாக தோனியை தெரிவு செய்தமை இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்ற வேதனையடைந்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு சென்னை அணிக்காக எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், 13 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சென்னை  சுப்பர் கிங்ஸ் அணியின் அழைப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35