கோப் குழுவின் தலைவர் என்ற முறையில் விசாரியுங்கள் - சுஜீவ

Published By: Raam

24 Jun, 2016 | 07:55 PM
image

(ப.பன்னீர்செல்வம் – ஆர்.ராம்)

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பான விசாரணையை நாம் சார்ந்த கட்சி ரீதியாக நோக்காது “கோப்”   குழுத்தலைவரென்ற ரீதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று சபையில் ஜே.வி.பி எம்.பி.யும் கோப் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றம் இன்று குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. 

இதன்போது வாய்மூல கேள்விக்கான விடைகளின் பின்னர் சிறப்புரிமை பிரச்சினையொன்றை கிளப்பிய ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தமது பெயரையும் குழுத்தலைவராக தாம் வகிக்கும் பதவியையும் கூறி இச்சபையில் ஐ.ம.சு. முன்னணி எம்.பி. விமல் வீரவன்ச   மத்திய வங்கி ஆளுநரை “மஞ்சள் நீரால் குளிக்க வார்த்து” அவரை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை நாம் மேற்கொள்வதாக குறிப்பிட்டார். இது ஹன்சார்ட்டிலும் அச்சிடப்பட்டுள்ளது.

இதனை கடுமையாக எதிர்க்கின்றோம். அவ்வாறான தேவை எமக்கு கிடையாது. எவரையும் மஞ்சள் நீரால் குளிக்க வார்த்து  தூய்மைப்படுத்தும் தேவை எமக்கு கிடையாது. எனவே விமல் வீரவன்ச எம்.பி.யின் கருத்தை நிராகரிக்கின்றேன். 

இது சபையை பிழையாக வழிநடத்தும் விடயம். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக முதலில் போர்க்கொடி தூக்கியவர்கள் நாம் தான் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. தெரிவித்தார்.

இதன்போது சபையில் எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி. எம்.பி. யுமான அநுர திஸாநாயக்க, விமல் வீரவன்ச எம்.பி.யின் கருத்தை கடுமையாக எதிர்த்ததோடு தேசப்பற்று என்ற போர்வையை போர்த்திக் கொண்டு கடந்த காலங்களில் அவர் செய்த மோசடிகள் வெட்கப்பட வேண்டியவை என விமர்சித்தார்.

இதன் பின்னர் சபையில் எழுந்த சர்வதேச வர்த்தகம், முதலீடுகள் தொடர்பான ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க  குறிப்பிடுகையில்  

சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.க்கு இவ்விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  ஜே.வி.பி. எம்.பி. பதவியையும் கோப் குழு தலைவர் பதவியையும் தனித்தனியாக பிரித்து அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே உங்களது கட்சி சார்ந்த கொள்கை தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய வங்கி ஆளுநரின் விசாரணையை முன்னெடுக்காது பக்கச்சார்பில்லாமல் கோப் குழுவின் தலைவர் என்ற ரீதியில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே மத்திய வங்கி ஆளுநர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களும் நிரூபணமாகவில்லை என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31