வைரஸ் குறித்து டிரம்ப் தெரிவிக்கும் விடயங்களை அமெரிக்க மக்கள் நம்புவதில்லை- வெளிப்படுத்தியது கருத்துக்கணிப்பு

24 Apr, 2020 | 09:07 AM
image

கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கும் விடயங்களை பெருமள அமெரிக்க மக்கள்  நம்புவதில்லை என்பது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி நாளாந்தம் கொரோனா வைரஸ் குறித்து செய்தியாளர் மாநாடுகளை நடத்துகின்ற போதிலும் பெருமளவு அமெரிக்கர்கள் அவருடை செய்தியாளர் மாநாடு குறித்து அக்கறை கொள்வவில்லை அவர் தெரிவிப்பதை நம்பவில்லை என்பதை அசோசியேட்டட் பிரஸ்-  பொதுவிவகார ஆராய்ச்சிக்கான நோர்க் நிலையம்  இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் இது புலனாகியுள்ளது.

டிரம்பிடமிருந்து கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ச்சியாக தகவல் கிடைப்பதாக 28 வீதமானவர்கள் தெரிவித்துள்ள அதேவேளை 23 வீதமானவர்கள் மாத்திரமே  டிரம்ப் தெரிவிப்பதை தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

டிரம்பின் ஆதரவாளர்கள் அவர் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ள போதிலும் குடியரசுக்கட்சியை சேர்ந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களே தாங்கள் கொரோனா வைரஸ் குறித்து டிரம்ப் தெரிவிக்கும் விடயங்களை அதிகளவு நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து டிரம்ப் தெரிவிக்கும் விடயங்களில் தங்களிற்கு சிறிதளவும் நம்பிக்கையில்லை என குடியரசுக்கட்சியின் 22 வீதமான ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசுக்கட்சியின் பெருமளவானவர்கள் கொரரோனா வைரசின் போது அவரது நம்பகதன்மை  குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதேவேளை 82வீதமானவர்கள் அவரின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன ; காரணமாக டிரம்பிற்கான ஆதரவு 42 வீதமாக காணப்படுகின்றது.

ஜனாதிபதி தெரிவிப்பதை தான் சிறிதளவும் நம்புவதில்லை ஆனால் ஜனாதிபதி தன்னால் முடிந்ததை செய்கின்றார் என டெக்சாசை சேர்ந்த லைன் சான்செஸ் தெரிவித்துள்ளார்.

பல தடவைகள் அவர் தனது நிபுணர்களின் தகவல்களிற்கு முரணான தகவல்களை வெளியிட்டுள்ளார்,ஒரு விடயத்தை டிரம்ப் அமைதியாக ஆழமாக சிந்திப்பதில்லை என சான்செஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தினை கையாளும் நிபுணர்களை டிரம்ப் செவிமடுக்கின்றார் இல்லை என அமெரிக்க மக்கள் கருதுவதும் கருத்துக்கணிப்பின் மூலம் புலனாகியுள்ளது.

68 வீதமானவர்கள் டிரம்ப் சுகாதார நிபுணர்களை செவிமடுக்கின்றார் இல்லை என கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை முடக்கல் நிலையை 80 வீதமான அமெரிக்க மக்கள் ஆதரிப்பதும்  இந்த கருத்துக்கணிப்பின் மூலம் புலனாகியுள்ளது.

பெருமளவானவர்கள் முடக்கல் நிலையை தற்போது முடிவிற்கு கொண்டுவருவது ஆபத்து என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 11 வீதமான ஜனநாயக கட்சியினரே ஜனாதிபதி என்ற அடிப்படையில் டிரம்பின் செயற்பாடுகளை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

84 வீதமான ஜனநாயக கட்சியினர்  கொரோனா வைரஸ் தொடர்பாக டிரம்ப் தெரிவிப்பதை நம்புவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நபர் தெரிவிப்பதை நான் நம்புவதில்லை,  பலரின் உயிர்கள் 

 ஊசலாடிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் இது துயரமான விடயம் என புளோரிடாவை சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10