கொரோனாவைக் கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க 4 தனியார் வைத்தியசாலைகளின் உதவி

23 Apr, 2020 | 10:19 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இன்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி தலைமையில் இடம்பெற்ற தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றின் பணிப்பாளர்களுடனான விஷேட கலந்துரையாடலை அடுத்து  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார  சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பணிமனை தெரிவித்தது.

இந் நிலையில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

 இதுவரை இலங்கையில், கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் 13  அரச பரிசோதனை மையங்கள்  ஊடாக  பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. 

சுமார் 600 வரையிலான மாதிரிகளே நாளொன்றுக்கு பரிசோதிக்கப்பட்டு வந்த நிலையில்,  அதனை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழல், அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது சுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலையிலேயே தனியார் வைத்தியசாலைகளுடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சு கலந்துரையாடியுள்ளது.

 இந் நிலையில்  டேர்டன்ஸ் வைத்தியசாலை,  நவலோக்க வைத்தியசாலை,  ஆசிரி வைத்தியசாலை மற்றும் லங்கா வைத்தியசாலை ஆகிய தனியார் வைத்தியசாலைகளில் இந்த  பி.சி.ஆர். குறித்த பரிசோதனைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

 அதன்படி சேகரிக்கபப்டும்  மாதிரிகளில், இந்த தனியார் வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் நாளொன்ருக்கு தலா 100 பரிசோதனைகள் வரை முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்ரனர். 

அதன்படி நாளொன்ருக்கு இலங்கையில்  ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை முன்னெடுக்க கூடியதாக அமையும் என  அந்த தகவல்கள் சுட்டிக்கடடுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22