பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் "கொவிட் -19" நிவாரணத்திற்கு ஒருமாத கொடுப்பனவை வழங்க இணக்கம்

Published By: J.G.Stephan

23 Apr, 2020 | 07:04 PM
image

(ஆர்.யசி)

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஒருமாத கொடுப்பனவை "கொவிட் -19" கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக வழங்க அமைச்சரவையில் இணக்கம் கண்டுள்ளனர்.

அரச  ஊழியர்கள் தமது கடமையை செய்கின்ற நேரத்தில்  நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார். 

 "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க "கொவிட் -19" நிவாரண நிதியம் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில்  அரச ஊழியர்கள் தமக்கான ஒருமாத கொடுப்பனவுகளை "கொவிட் -19" கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு வழங்குகின்றார்கள் என்றால் ஆட்சியாளர்கள் முதலில் மக்களுக்கான சேவையை முன்னெடுக்க தமது கொடுப்பனவுகளை வழங்க வேண்டும்.

 ஆகவே அதற்கு அமைச்சரவைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அதற்கமைய பிரதமர் மற்றும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தமது ஒருமாத கொடுப்பனவை கொவிட் -19 நிவாரண நிதிக்காக வழங்க தாம் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08