சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, மேலும் பல இடங்களில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

தொடர்ச்சியாக நிலவுகின்ற அதிக மழையுடனான காலநிலை காரணமாக ஹல்தும்முல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிகபொத ரனசிங்கம பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இப் பிரதேசத்தில் உள்ளோர். தமது உறவினர்களின் வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் பெரகலை - வெள்ளவாய வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் பயணிக்குமாறும் பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளையிலிருந்து ஹல்தும்முல்லை வரையான வீதியில் அதிகபனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் பகல் வேளைகளிலும் வாகனங்களின் மின் விளக்குகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.