வடக்கில் அடுத்த கட்டமாக வெளிநாடு, வெளிமாவட்டங்களிலிருந்து வருவோருக்கும் பரிசோதனை - வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

Published By: J.G.Stephan

23 Apr, 2020 | 03:56 PM
image

வடமாகாணத்தில் 346 பேருக்கும் வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோனை நிறைவு அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்கு சென்று வருபவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக மட்டத்தில் கொரோனா பரம்பல் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொரோனா தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம்.

இதன் அடிப்படையில் அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 346 பேரை அடையாளம் கண்டுள்ளோம் . அவர்கள் அனைவருக்குமான பரிசோதனைகள் முடிவடைந்துள்ளன.

அதில் 20 பேரை காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதித்திருந்தோம். அவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 04 பேருக்கு மூன்றாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இவர்களுடன் இவர்களுக்கு உணவு பரிமாறிய நான்கு இராணுவத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை விட யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 26 பேருக்கு இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 23 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆராதனையில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் சோதனைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் முதலாவது தொற்றாளரான தாவடியைச் சேர்ந்த நபருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டள்ளது.

அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அது மட்டுமன்றி கொழும்பு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகள் ஏனைய தேவைகளுக்காக பாரவூர்திகள் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஒவ்வொரு மாட்டங்களிலும் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளது.

இதுவரைக்கும் 411 பேருக்கு சமூக மட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். இவற்றில் 11 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47