ஜேர்மன், நோர்வே நாட்டுத் தலைவர்களை பாராட்டி ரணில் விக்கிரமசிங்க கடிதம்

23 Apr, 2020 | 05:09 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஜேர்மன் மற்றும் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி அந்நாட்டுத் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கிறார்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் உலகநாடுகள் பலவற்றுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நிலையில், செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கும் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மற்றும் நோர்வே பிரதமர் ஏர்னா சுர்பேர்க் ஆகியோரைப் பாராட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கிறார்.

அந்தவகையில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கலுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவலானது மக்களின் அன்றாட வாழ்க்கை முறைக்குப் பாரிய அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் தோற்றுவித்திருப்பதுடன், எதிர்காலம் தொடர்பான அவதானநிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் உங்களது தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸ் பரவலால் ஜேர்மனிய மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து விரைவாக மீளமுடியும் என்று நம்புகின்றேன். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்துவதற்கும் உங்களது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் எனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நோர்வே பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நோர்வே தொற்றுநோய் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது என்றும் சுட்டக்காட்டியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22