வாகன போக்குவரத்து தண்டப்பணத்தை செலுத்த கால அவகாசம்

Published By: Digital Desk 3

23 Apr, 2020 | 01:29 PM
image

(எம்.மனோசித்ரா)

மார்ச் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னர் வழங்கப்பட்ட வாகன போக்குவரத்து தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணம் இன்றி எத்தகைய தபால் அல்லது உப தபால் நிலையங்களில் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் செலுத்த முடியாத வாகன தண்டப் பணத்தை, மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கான நிவாரண காலத்தை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபரின் இனக்கப்பாட்டுடன் நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்தின் கீழ் தபால் திணைகளத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னர் வழங்கப்பட்ட தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணம் இன்றி எத்தகைய தபால் அல்லது உப தபால் நிலையங்களில் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று பெப்ரவரி 16 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையில் விதிக்கப்பட்டுள்ள தண்டப்பணத்தை அங்கீகரிக்கப்பட்ட மேலதிக தண்டப்பணத் தொகையுடன் செலுத்துவதற்கும் மே மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கால அவகாசம் மே 2 ஆம் திகதி வரை மாத்திரமே ஏற்புடையது என்பதால் இந்த காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட தண்டப்பணத்தை செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான காலம் அவகாசம் இந்த மாவட்டத்தில் உள்ள தபால் அல்லது உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41