ஒரே நாளில் உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி : 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள்

23 Apr, 2020 | 12:28 PM
image

கொரோனா தொற்று நோய் காரணமாக  உலகளின் 210 நாடுகளிலும் பிராந்தியங்களிளும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,635,716 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை 184,066 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 79,956 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியும்,  6,607 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அத்துடன் 717,444 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 1,734,206 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக தொடந்து அதிக பாதிப்புகள் பதிவாகிவரும் அமெரிக்காவில் நேற்றையதினம் 29,973 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 848,717 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் நேற்றையதினம் 2,341 பேர் உயிரிழந்ததையடுத்து இறப்பு எண்ணிக்கை 47,659 ஆக உயர்ந்துள்ளது. இத்துடன் அங்கு 84,050 பேர் குணமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் அதிக கூடிய பாதிப்புக்கள் பதிவான ஸ்பெயினில் நேற்றைய தினம் 4,211 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 435 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதனையடுத்து இங்கு தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 208,389 ஆகவும் மொத்த உயிரிழப்பு 21,717 ஆகவும் உயர்ந்துள்ளது.

இத்தாலியில் இது வரை 187,327 பேர் தொற்றுக்குள்ளாகியும் 25,085 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இங்கு நேற்றையதினம் 437 பேர் உயிரிழந்ததுடன் இதுவரை 54,543 பேர் குணமடைந்துள்ளனர்.

பிரான்ஸில் இது வரை 159,877 பேர் தொற்றுக்குள்ளாகியும் 21,340 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இங்கு நேற்றையதினம் 544 பேர் உயிரிழந்ததுடன் இதுவரை 40,657 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜேர்மனியில் இது வரை 150,648 பேர் தொற்றுக்குள்ளாகியும் 5,315 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இங்கு நேற்றையதினம் 229 பேர் உயிரிழந்ததுடன் இதுவரை 99,400 பேர் குணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில், இது வரை 133,495 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் நேற்றையதினம் அங்கு 4,451 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 763 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அத்துடன் மொத்த உயிரிழப்பு 18,100 ஆக பதிவதாகியுள்ளது.

இதேவேளை பல கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட சீனாவில் ஒருவர் கூட நேற்றைய தினம் இனங்காணப்படவில்லை.

அத்துடன் வடகொரியா, சிங்கப்பூர்,  கட்டார், மலேசியா, அவுஸ்திரேலியா, ஈஸ்ரேல்,  சவுதி அரேபியா, துபாய், நோர்வே, கட்டார், ஆகிய நாடுகளில் நேற்றையதினம் ஐந்துக்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,393 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றையதினம் 1409 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 681 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இங்கு 4258 பேர் குணமடைந்துள்ளனர். 

இலங்கையில் நேற்றைய தினம்  20 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இலங்கையில் இதுவரை 105 பேர் குணமடைந்தும் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08