கொரோனாவிற்காக ஹைட்ரோக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தியவர்களே அதிகம் இறந்துள்ளனர் : அமெரிக்க ஆய்வில் தகவல்

Published By: J.G.Stephan

23 Apr, 2020 | 09:34 AM
image

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.



65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனாவை தடுக்க ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்து சிறந்ததென நம்பிய ஜனாதிபதி, டிரம்ப் அம்மருந்தை இந்தியாவிடம் பெற்றுக்கொண்டார்.

அமெரிக்கா வாங்கியதால் இந்த மருந்தை 55 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளுக்கும் வாங்கி குவித்தன. இதனால் திடீரென ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்து எப்படி செயல்படுகிறது என்பது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். 

இந்நிலையில், ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் மருந்துகளை உட்கொண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 368 பேரை ஆய்வுக்குட்படுத்தினர்.

இதில்? ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் அல்லது செயற்கை சுவாச கருவி பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் பொதுவான சிகிச்சை முறையில் ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்தையோ, அல்லது அந்த மருந்துடன் அஸித்ரோமைசின் மருந்தையோ சேர்த்து சாப்பிடாத நோயாளிகளுக்கு மரண அபாயமோ, செயற்கை சுவாச கருவி பொருத்த வேண்டிய அபாயமோ குறைவாகவே உள்ளது என்று ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47