சுற்றிவளைப்புக்குச் சென்ற 25 வயதான வனவிலங்கு அதிகாரி பரிதாபமாக பலி

Published By: J.G.Stephan

23 Apr, 2020 | 09:59 AM
image

தம்பகல - கலவோய வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார்.

கலா ஓயா தேசிய வனவிலங்கு சரணாலய பகுதியில் சுற்றிவளைப்புக்குச்சென்ற வனவிலங்கு திணைக்களத்தின் இங்கினியாகலை அதிகாரியே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சரணாலயத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்தோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.


தம்பகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவோய தேசிய வனப்பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இங்னியாகல வனஜீவராசிகள் பாதுகாப்பு காரியலயத்தின் அதிகாரிகள் சிலர் சோதனை நடடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். 

இதன்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது குறித்த வனப்பகுதியில் வேட்டையிடும் நோக்கத்துடன் வந்துள்ள நபர்களால் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கி சூட்டு நடத்தப்பட்டுள்ளதுடன் , சம்பவத்தில் அதிகாரியொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து சந்தேக நபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

இங்கினியாகல வனஜீவராசிகள் பாதுகாப்பு நிலையத்தில் கடமைபுரிந்து வந்த 25 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து குழல் 12 ரக துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கியை பயன்படுத்தியே அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22