சட்டவிரோதமாக தங்கக்கட்டிகளை எடுத்துச்சென்ற இலங்கை பிரஜைகள் இருவரை இந்திய சுங்கப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2.5 மில்லியன் பெருமதியான தங்கக்கட்டிகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (23) இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து இந்தியாவின் கொச்சின் விமானநிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே சந்தேக நபர்கள் கொச்சின் விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களிடமிருந்து, 200 கிராம் நிறையுடைய எட்டு தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.