கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீள இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது - சி.வி.கே.சிவஞானம்

22 Apr, 2020 | 09:48 PM
image

(தி.சோபிதன்)

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் தாமாகவே மீள இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அரசு இதனாலேயே அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இழுத்தடித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றது. எனினும் ஊரடங்கு சட்டம் இன்றுவரை சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் இன்று வரை அமல்படுத்தவில்லை.

அவ்வாறு அந்த சட்டமூலத்தை அமல்படுத்தினால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் தாமாகவே இயங்கும். ஆகவே இந்த அச்சம் காரணமாகவே கோத்தாபய அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அஞ்சி வருகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தனிவதற்கு முன்பாகவே அரசாங்கம் பல இடங்களில் ஊரடங்கு சட்டத்தை பகுதியளவில் தளர்த்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயமாக கருத வேண்டும். ஏனெனில் சுகாதார அமைப்புக்கள் மருத்துவ சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதனை கணக்கில் எடுக்காது தேர்தலை நடத்துவதிலேயே குறியாக இருக்கின்றது.

அரசாங்கம் தாம் நினைத்தது போல் தேர்தலை நடத்தியே தீரும் அதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை எனினும் அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதே கேள்விக் குறியாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04