பொதுத்தேர்தல் நடத்துவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்: கருணா அம்மான்

Published By: J.G.Stephan

22 Apr, 2020 | 09:22 PM
image

பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம்  மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அம்பாறை மாவட்டம்  கல்முனையில் அமைந்துள்ள புதன்கிழமை(22.04.2020)  ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில், எனது  தனிப்பட்ட கருத்தானது எமது நாட்டில் தேர்தல் நடாத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அச்ச நிலைமையை எதிர்நோக்கி உள்ளார்கள். இதனால்  ஒரு தேர்தலுக்கு செல்வதென்பது சாத்தியமில்லை. அரசாங்கம் இது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம்  கூடிக் கொண்டுதான்  செல்கின்றது. அந்த வைரஸ் தாக்கம்  குறைந்ததாக நாங்கள் அறியவில்லை. எனவே தேர்தல் குறித்து  நாங்கள் உடனே அதை சிந்திக்க முடியாது தேர்தல் நடாத்துவதென்பது  என்னை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாக இருக்கின்றது.

இந்த நேரத்தில் சிலர் இச்சூழலை பயன்படுத்தி  ஊழல்  நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எமக்கு மக்களின் உயிர் முக்கியமானது. உலக மக்கள் தத்தமது சொந்தங்கள் உறவுகளிடம்   பழகுவதற்கு பயந்து வாழ்கின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. அதே நேரம் இந்நிலைமையை அறிந்து தேர்தலை பிற்போடுவது நன்று. எனினும் தேர்தல் நடாத்துவது குறித்து,  மக்கள் மத்தியிலும் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது என்பதை தெரிவிக்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44