இலங்கை கடற்படையினரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களை எதிர்வரும் ஜுலை 07 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுளைந்த காரணத்தால்  கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை யாழ் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்கள் 5 பேரும் யாழ் சிறைச்சாலையில்  வைக்கப்பட்டுள்ளனர்.