தனிமைப்படுத்தலை நிறைவேற்றிய அனைவருக்கும் மீண்டும் பாிசோதனை மேற்கொள்ள வேண்டும் - முரளி வல்லிபுரநாதன் 

22 Apr, 2020 | 07:22 PM
image

(எம் நியூட்டன்)

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகவே கொரோனா பாதிப்பு தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பதை 100 வீதம் உறுதியாக கூற முடியும். என சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார் தனிமைப்படுத்தல் நிலையங்களின் நிலை தொடா்பாக ஊடகவியலாளா்கள் கருத்துக் கேட்டபோதே அவா் இதனை தெரிவித்தார்.

 

இது தொடா்பாக மேலும் அவா் தெரிவிக்கையில்,

ஒரு ஊா் மக்கள், ஒரு விமானத்தில் பயணித்தவா்கள் என கூட்டம் கூட்டமாக மக்களை ஒரு கூரையின் கீழ் தனிமைப்படுத் துவது தவறானது. அவ்வாறான நிலையில் தொற்றுக்குள்ளாகாதவா்களுக்கு கூட தொற்று ஏற்படுவதற்கு சந்தா்ப்பங்கள் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீளமைப்பு செய்யப்படவேண்டும். 

குறிப்பாக பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2ம் முறை அடையாளம் காணப்பட்டவா்களுக்கு 30 நாட்களின் பின்னா் தொற்று அடையாளம் காணப்பட்டது. அவ்வாறு 30 நாட்களின் பின்னா் தொற்று அடையாளம் காணப்படுவது உலகளாவி யரீதியில் ஒரு வீதமாகவே நடந்திருக்கின்றது. பலாலியில் அடையாளம் காணப்பட்டதைபோல் 10 போ் அடையாளம் காணப்பட்ட முடியாது. 

இது பலாலிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் எவையும் பாதுகாப்பானவை அல்ல. அவை மீளமைக்கப்படவேண்டும். மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியிருக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு பாிசோதனை நடாத்தவேண்டும். 

அவ்வாறான பாிசோதனையின் ஊடாகவே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு தொற்று இல்லை. என்பதை 100 வீதம் உறுதிப்படுத்த முடியும் என்றாா். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22