4 நாட்களில் 7 இலட்சம் ரூபாவை திரட்டிய இந்திய மகளிர் ஹொக்கி அணி!

22 Apr, 2020 | 05:04 PM
image

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வாதற்காக வித்தியாசமான முறையை கையாண்ட, இந்திய மகளிர் ஹொக்கி அணியினர் முதல் நான்கு நாட்களில் இந்திய மதிப்பில்  7 இலட்சம் ரூபா  நிதி திரட்டியது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஏழை கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக இந்திய மகளிர் ஹொக்கி அணி யினர் ‘ஒன்லைன்’  மூலம் உடல் தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது.

இதன்படி வீராங்கனைகள் அளிக்கும் உடல் தகுதி சவாலை ஏற்று செயற்படும் இரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும். 18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில்  மாத்திரம் 7 இலட்சம் ரூபா திரட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மகளிர் ஹொக்கி அணியின் வீராங்கனை சுஷிலா சானு தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் உடற் தகுதி சவால் மூலம் நிதி திரட்டி வருவதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போது ஹொக்கி பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருப்பதால், முந்தைய காலங்களில் நாங்கள் விளையாடிய போட்டி மற்றும் எதிரணியினர் விளையாடிய போட்டிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து ஆட்டத்தை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், எமது மக்களுக்கு எம்மாலான உதவிகளை தொடர்ந்து செய்வோம்.” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49