உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரிஷாத்

21 Apr, 2020 | 06:39 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்து சட்டத்துக்கு முன்நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அப்பாவிகளை குற்றவாளியாக்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவடம் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர் விடுத்திருந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஆலயங்களில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீதும் நட்சத்திர ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்திருந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவிப்பதுடன் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இன்னும் நோயுற்றிருப்பவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கின்றோம்.

மேலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையிலும் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்ததாக தெரியவில்லை. மாறாக குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைதுகள் இடம்பெற்று வருகின்றதாகவே தெரிகின்றது.

அதனால்  தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்து சட்டத்துக்கு முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அப்பாவிகளை குற்றவாளிகளாக்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்றவகையில் பயங்கரவாதத்தினால் ஏற்படும் துயரங்களை நான் நன்கு உணர்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40