நல்லாட்சியின் இரு அரச தலைவர்களும் பாதுகாப்பு பிரிவுமே உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டும் - அருந்திக பெர்னாண்டோ

Published By: J.G.Stephan

21 Apr, 2020 | 06:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இரு அரச தலைவர்களும்,பாதுகாப்பு பிரிவின் முக்கிய தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டில் இனி அடிப்படைவாத தீவிரவாத செயற்பாடுகள் தோற்றம் பெறாதளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.



மேலும்,  ஈஸ்டர் ஞாயிறுதின குண்டுத்தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் ஒரு வருடத்தை கடந்துள்ளது. இந்த தாக்குதல் திடீரென இடம் பெற்றதல்ல. தாக்குதல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்கூட்டியே அனைத்து தகவல்களும் தொடர்ந்து கிடைக்கப்பெற்றன.ஆனால் அரச தலைவர்களின் தனிப்பட்ட முரண்பாடுகளினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் கவனயீனத்தினால் தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த்துடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இரு அரச தலைவர்கள் பொறுப்புகூற வேண்டும்.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு  உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். உண்மையினை கண்டறிவதற்கு பதிலாக குற்றவாளிகளை பாதுகாப்பதே தெரிவு குழுவின் நோக்கமாக காணப்பட்டது. தெரிவு குழுவினால் எவ்வித உண்மையும் கண்டறியப்பட்டவில்லை.

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டே  பெரும்பாலான மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தேசிய பாதுகாப்புக்கு  மாத்திரம் முக்கியத்துவம் வழங்குவார். நாட்டில் தீவிரவாத செயற்பாடுகள் இனியொரு போதும் தோற்றம் பெறாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55