சிறுபான்மையினர்கள் என எண்ணி ஒதுங்கியிருக்காது நாட்டை முன்னேற்ற முயற்சிசெய்ய வேண்டும் - பேராயர்

20 Apr, 2020 | 09:47 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்துக்கள் , இஸ்லாமியர்கள், கத்தோலிக்க மதத்தவராகிய நாம் சிறுபான்மையினர்கள் என்று எண்ணி ஒதுங்கியிருக்காது எல்லோரும் பௌத்த மக்களோடு சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் பயணிக்க செய்ய முயற்சிக்க வேண்டும். அதன் மூலமே அனைவரதும் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய ஒழுங்கு முறைக்குச் செல்ல முடியும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதின குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இன்று திங்கட்கிழமை விசேட அறிவித்தலை வெளியிட்ட போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் கத்தோலிக்க மக்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை. அவர்களில் இந்து, பௌத்த மக்களும் உள்ளடங்குகின்றனர். நாட்டில் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை இந்த தாக்குதல் சம்பவம் செலுத்தியது. எனவே தான் எம்மால் இந்த அறிவிப்பை விடுக்க வேண்டியுள்ளது.

நாட்டில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் பாரிய பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு நாம் அனைவரும் ஒற்றுமையைக் கடைபிடித்தோம். இதனை தொடர்ந்தும் பாதுக்காக்க வேண்டும்.

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் நிச்சயமாக கண்டறியப்பட வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது.

ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய முடியாமல் போயுள்ளது. அவ்வாறானவர்களை இனங்காண்பது அத்தியாவசியமானதாகும். அவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தகவல்களை கிடைக்கப் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தமைக்கு அரசியலில் உயர் அதிகாரத்தில் இருந்தவர்கள் முதற்கொண்டு கீழ்மட்டத்திலுள்ளவர்கள் வரை அனைவரும் பொறுப்பு கூற வேண்டும். எனவே யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினருக்கு நன்றி கூற விரும்புகின்றேன். தாக்குதலின் போது எம்முடன் இணைந்து செயற்பட்டனர். ஏனைய மதத் தலைவர்களும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தனர். பாதுகாப்புதுறையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையை நினைவுபடுத்த விரும்புவதோடு அவர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இப்படியான சம்பவங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உண்டு. இனம் மற்றும் மதம் பற்றி நிலவுகின்ற இயற்கையான வேறுபாடுகளை வேற்றுமையை விட ஒற்றுமைக்காக எம்மிடமிருக்கும் வளமாகக் கருதி ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக் கொண்டு நாட்டில் நன்மை கருதி எம்மை அர்ப்பணப்பது எல்லாவற்றுக்கும் மேலானதாகும்.

இலங்கையின் பாரம்பரிய வரலாற்று கலாசாரங்கள் எவை என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை நாம் மதிக்கின்ற போதும் எங்களுக்குரிய பொதுவான உரிமையுடன் நாம் வாழ்வதும் , விசேடமாக சிறுபான்மை இனத்தவராகக் கருதப்படுபவர்கள் இதைப் பற்றி ஆழமாக சிந்திப்பது அவசியமாகும்.

பொதுவாக நிலவுகின்ற மத சிந்தனையின் அடிப்படையில் பௌத்த ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் கூட்டுறவு கட்டியெழுப்பப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொண்டோம்.

இந்துக்கள் , இஸ்லாமியர்கள், கத்தோலிக்க மதத்தவராகிய நாம் சிறுபான்மையினர்கள் என்று எண்ணி ஒதுங்கியிருகாது எல்லோரும் பௌத்த மக்களோடு சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் பயணிக்க செய்ய முயற்சி எடுக்க வேண்டும். அதன் மூலமே அனைவரதும் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய ஒழுங்கு முறைக்குச் செல்ல முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31