உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தோருக்கான நினைவு கூருதல் குறித்து அஸ்கிரிய பீடத்தின் வேண்டுகோள்

Published By: J.G.Stephan

20 Apr, 2020 | 04:11 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.

இந்நிலையில் நாட்டில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடி நிலைமையின் காரணமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை அனைவரும் ஒன்று கூடி நினைவு கூர முடியாது என்பதால் அனைவரையும் தத்தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தோருக்காக பிரார்த்திக்குமாறு அஸ்கிரிய பீடம் கேட்டுக் கொண்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் குறித்து அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க மெதகம தம்மானந்த தேரரிடம் வினவிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.





அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்பாராத விதமாக கடந்த வருடம் இத்தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். எனினும் நாளையதினம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை நினைவு கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வரையறைகளுடன்  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், பெருமளவான மக்கள் ஒன்று கூடும் வகையிலான மத வழிபாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைவரதும் நலன் கருதி அரசாங்கத்தின் அறிவுறுகளுக்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும். எனவே மதபேதம் இன்றி நாட்டு மக்கள் அனைவரும் தமது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறும் அவர்களுக்காகவும் அவர்களது உறவினர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11