தனது பக்கச்சார்பான செயற்பாடுகள் யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்தினார் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

Published By: Digital Desk 3

20 Apr, 2020 | 02:55 PM
image

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பிலும் ஒத்தி வைப்பது தொடர்பிலும் வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் எந்த கருத்துக்களும் தேர்தலை ஒத்திவைக்கவோ நடத்தவோ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இன்று அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது,

இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தேர்தலுக்கான தினத்தை நியமிப்பது தொடர்பில் ஆணைக்குழு எவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கேள்வியெழுப்புகின்றனர். எனினும் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்று எனக்கு எதுவும் இல்லை.

இது மூன்று நபர்களுடன் தொடர்புபட்டது. அத்தோடு ஆணைக்குழுவுக்குள் கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாகும். தேர்தலை பிற்போடுவது தொடர்பிலும் உடனடியாக நடத்துவது தொடர்பிலும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், எந்த கருத்துக்கள் எதுவும் தேர்தலை ஒத்திவைக்கவோ நடத்தவோ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது.

தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவது தொடர்பிலும் பக்கச்சார்பற்ற களத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பிலேயே ஆணைக்குழு பரிசீலிக்கும். ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு கருத்துக்கள வெளியிடப்பட்டாலும் அவை தேர்தலை விரைவில் நடத்துவதிலோ ஒத்தி வைப்பதிலோ தாக்கம் செலுத்தாது.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் தற்போதைய சூழலில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்.

நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானதாகும். அதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழு அவதானம் செலுத்தும். அத்தோடு கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினரிடமும் ஆணைக்குழு கலந்தாலோசிக்கும்.

நான் 1983 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவில் சேவையில் இணைந்தலிலிருந்து இன்று வரை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த அரசியல்வாதிக்கும் அல்லது அரசியல் குழுவினருக்கும் கட்சிகளுக்கும் பக்க சார்பாக செயற்பட்டதில்லை.

அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் மாத்திரமே எனது பக்கச்சார்பான செயற்பாடுகள் அமையும். நான் என்றுமே மக்கள் பக்கமே சார்ந்திருப்பேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13