'உணவுப்பற்றாக்குறையை தடுப்பதற்கு தெற்காசியா முதல் முன்னுரிமை கொடுக்கவேண்டிய நடவடிக்கை'

20 Apr, 2020 | 02:14 PM
image

புதிய கொரோனாவைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளின் பொாருளாதார தாக்கத்தின் விளைவாக தெற்காசியாவில் பேரிடரான  நிலைவரம் ஏற்படும் என்று உலகவங்கி இம்மாதம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் முன்மதிப்பீடு செய்திருக்கிறது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் ( சார்க்) 8 நாடுகளும் ( இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ) 40 வருடங்களில்  படுமோசமான பொருளாதார செயற்பாடுகளைக் காணப்போகின்றன. இவற்றில் அரைவாசி நாடுகள் ஆழமான பொருளாதார மந்தநிலைக்குள் (Deep recession ) விழப்போகின்றன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   

இந்த அறிக்கையை தயாரித்தவரான உலகவங்கியின் தெற்காசியாவுக்கான பிரதம பொருளியல் நிபுணர் ஹான்ஸ் ரிம்மர் ' த இந்து ' பத்திரிகையின் இராஜதந்திர விவகாரங்கள் ஆசிரியர் சுஹாசினி ஹைதருக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேகமான நேர்காணலொன்றில் பலம்பெயர் தொழிலாளர்களின் திரும்பி வருவதால் ஏற்படக்கூடிய நிலைவரத்தை கையாளுதல், சேவைத்துறையின் வருவாய் இழப்பு மற்றும் மிகவும் வறிய மக்களின் உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவை பிராந்தியம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்சினைகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

கேள்வி ; உலகவங்கியின் அறிக்கையில் தெற்காசிய பொருளாதாரம் மீதான முன்மதிப்பீட்டில்   வளர்ச்சி 6.8 சதவீதத்தில் இருந்து 1.8 -- 2.8 சதவீதத்துக்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.பொருளாதார செயற்பாடுகள் முழுமையாக எப்போது மீளஆரம்பிக்கும் என்பது எமக்கு இன்னமும் தெரியவில்லை.பொருளாதார வளரச்சியின் வீழ்ச்சி இதையும் விட பெரியதாக இருக்கமுடியுமா? 

 

பதில் ; முன்மதிப்பீடு ஏற்கெனவே பல பாதகமான  விளைவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. முன்னேறிய பொருளாதார நாடுகளைப் பொறுத்தவரை, எதிர்கால நிகழ்வுப்போக்குகள் உயர்மட்ட எல்லை மற்றும் கீழ்மட்ட எல்லை பாதிப்புக்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும் ; முன்னேறிய பொருளாதாரங்கள் ஒரு 2 மாதகாலம்  முடக்கப்பட்டால் (Lockdown ) ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், அதே பொருளாதாரங்கள் ஒரு 4 மாதங்களுக்கு முடக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளே அவை.இந்த நிகழ்வுப்போக்குகள்  தெற்காசியாவைப் பொறுத்தவரை, ஏற்றுமதிகளில் மிகவும் கடுமையான வீழ்ச்சி, உற்பத்திப்பொருட்களின் பெறுமதியை அதிகரிப்பதற்கான செயன்முறை தொடரில் ஏற்படக்கூடிய சீர்குலைவு ((Disruption of global value chains ) முதலீட்டு ஆர்வமின்மை,பின்னோக்கிய  மூலதனப்பாய்ச்சல் (Reversal of capital flows) மற்றும் பண அனுப்பீட்டில் வீழ்ச்சி  என்றே அர்த்தப்படும்.எமது உயர்மட்ட பாதிப்பு, கீழ்மட்ட பாதிப்பு எல்லை முன்மதிப்பீடுகள் உள்நாட்டு விருந்தோம்பல் (Domestic hospitalality services) சேவைகளில் கடுமையான வீழ்ச்சிபற்றிய அனுமானங்களைக் கொண்டிருக்கின்றன.ஆனால், வளர்ச்சியில் வீழ்ச்சி உண்மையில் பெரியதாக இருக்கக்கூடும். 

   படுமோசமான எதிர்கால நிகழ்வுப்போக்கை (Worst case scenario ) கணிப்பிட்டிருப்தாக நாம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றோம்.அதில் தெற்காசிய பொருளாதாரங்கள் நீடித்த முடக்கத்துக்குள்ளாகக்கூடிய சாத்தியம் குறித்து நாம் அனுமானித்தோம்.அதாவது மூன்று மாதங்களுக்கு நீடிக்க்கப்பட்ட முடக்கமும் (Extended lockdown) பகுதிபகுதியான ( Partial lockdown) முடக்கமுமே அவை.இந்த நிலைமைகளின் விளைவாக  பிராந்தியத்தில்   வளர்ச்சி எதிர்மறையானதாகவே   ( 1 சதவீத சுருக்கம் ) வந்துமுடியும்.

     கேள்வி ; புதிய கொரோனாவைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா நடைமுறைப்படுத்தும் கண்டிப்பான  40 நாள் முடக்கத்தை உலகவங்கி அங்கீகரித்திருக்கிறது. அதை தெற்காசியாவின் ஏனைய நாடுகளும் வேறுபட்ட அளவுகளில் பின்பற்றுகின்றன.குறிப்பாக, பொருளாதார விளைவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், முடக்கம் நீடிக்கப்பட்டால் அது எவ்வாறு பயன்தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? 

  பதில் ; இந்திய அரசாங்கத்தினதும் மற்றைய தெற்காசிய நாடுகளினதும் கொரோனாவைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன்.மட்டுப்படுத்தப்பட்ட சுகாதாரப்பராமரிப்பு ஆற்றலை வைத்துக்கொண்டு கொவிட் --19 பரவலைக் கட்டுப்படுத்துவது அல்லது அதன் பாதிப்பை இயன்றவரை தணிப்பது என்பது முக்கியமானதாகும்.ஆனால், உயர்ந்த சனத்தொகை அடர்த்திக்கு மத்தியில் இது இடர்மிகுந்த ஒரு பணியாகும்.சேரிவாழ் மக்கள், உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் மத்தியில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதென்பது பெரிய சவாலாகும். ஊரடங்கும் பொருளாதாரச் செயற்பாடுகள் முடக்கமும்  பெருமளவுக்கு நலிவுற்ற மக்கள் பிரிவினரின் வருமானத்தை அபகரித்துவிடுவது லேதிகமான ஒரு சிக்கலாகும்.

    முடக்கம் அவசியமானது.ஆனால், போதுமானதல்ல என்பதே நான் முடிவாகக்கூறுவது.முடக்கத்துடன் இணைந்ததாக உணவு விநியோகம், தற்காலிக வேலைக்கான திட்டம் மற்றும் மருத்துவப்பரிசோதனை ஆகியவறறையும் முன்னெடுத்தால் மேலும் பயனுடையதாக இருக்கும்.பொருளாதாரத்தை மீளத்திறப்பதற்கு இவை தேவைப்படுகின்றன.உணவு விநியோகம், பாதுகாப்புக் கருவிகள்  தயாரிப்பு, பொது இடங்களில் கிருமிநீக்க நடவடிக்கைள் மற்றும் மருத்துவப்பரிசோதனை ஆகியவற்றின் மீது கவனத்தைக் குவிக்கும் வகையிலானதாக தற்காலிக வேலைத்திட்டம் அமையமுடியும்.

  கேள்வி; பெரும்பாலான தெற்காசிய நாடுகள் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பீடுகளில் (   Migrant remittance ) தங்கியிருக்கின்றன.வெளிநாடுகளில் வேலைசெய்யும் தெற்காசிய நாட்டவர்களின் வேலையிழப்பு,  உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்களின் நெருக்கடியுடன் சேர்த்து  ( குறிப்பாக இந்தியாவில் ) எந்தளவுக்கு எமது தொழில்சந்தையில் ( Labour market) மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? இதற்கு முகங்கொடு்க்க எவ்வாறு நாடுகள் தங்களைத் தயார்செய்துகொள்ளவேண்டும்?

     பதில் ; குறிப்பாக, வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் ( இவர்களில் பலர் தற்சமயம் வெளிநாடுகளில் தொடர்ந்தும் இருக்கின்றபோதிலும் கூட ) தங்களது நாடுகளுக்கு திரும்பிவரக்கூடிய சாத்தியம் இருக்கிறது.இது உலக பொருளாதார மந்தநிலையினதும் எண்ணெய் விலைகளில்  கடும் வீழ்ச்சியினதும்  விளைவானதாக இருக்கும்.சொந்த நாடுகளில் அவர்கள் வேலைவாய்ப்புக்களை தேடவேண்டியிருக்கும்.அத்துடன் உள்நாட்டு பும்பெயர் தொழிலாளர்களுடன் போட்டிபோடவேண்டியிருக்கும்.அதன் காரணத்தினால்தான் தொழில்வாய்ப்புகள் உருவாக்கத்தில் தீவிர பங்கு வகிக்கக்கூடியதாக பொருளாதார செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படக்கூடிய சூழ்நிலையை அரசாங்கங்கள் உருவாக்கவேண்டும்.

   கேள்வி; புதிய கொரோனாவைரஸின் தாக்கத்தைப் தொறுத்தவரை, தெற்காசியாவை ஒரு பிராந்தியம் என்ற வகையி்ல் உலகின் ஏனைய பிராந்தியங்களுடன் எவ்வாறு ஒப்பிடுவது ? ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் கிழக்காசியா போன்ற ஏனைய பாகங்களையும் விட தெற்காசியாவில் கொரோனாவைரஸ் மந்தகதியிலேயே பரவுவதாக ஆய்வுளின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறத ? 

  பதில் ; முதல் கொவிட் -- 19 வைரஸ் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடனடியாகவே கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டமை இதற்கு உதவியிருக்கக்கூடும்.நேரகாலத்தோடு  கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்  தொற்றுப்பரவலைக் குறைக்க முடியும் என்பதை உலகம் பூராவுமுள்ள சான்றுகள் வெளிக்காட்டுகின்றன.

  கேள்வி ; உணவுப்பாதுகாப்பும் மூலோபாயமாக சேமித்துவைக்கப்பட்டிருக்கும் உணவுக்கையிருப்புக்களை விடுவிப்பதும் எவ்வாறு முக்கியத்துவமுடையவையாகின்றன ?சுமுதாயத்தின் மிகவும் நலிவுற்ற பிரிவினருக்கு விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் பிராந்தியத்தின் வெவ்வேறு நாடுகளுக்கு இருக்கக்கூடிய ஆற்றலை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள் ? இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உணவைப்பெறுவதற்கு மக்கள் பிரமாண்டமான வரிசைகளில் காத்துநிற்பதையும் உணவுத்தட்டுப்பாட்டையும் காண்கிறோம்?

   பதில் ; இது மிகவும் பெரிய அக்கறைகளில் ஒன்றாகும்.விநியோகச் சங்கிலித்தொடரில் சீர்குலைவும் பீதியில் பொருட்களை அவசரஅவசரமாக வாங்கி வீடுகளில் மக்கள் பதுக்கிவைக்கும் விலைகள் போக்கும் விலைகள் கடுமையாக உயர்வதற்கு வழவகுக்கலாம்.அதனுடன் சேர்த்து முறைசாரா துறைகள் பலவற்றில்  வேலைசெய்யும்  தொழிலாளர்களின்  வருமான இழப்பு நலிவுற்ற மக்கள் பிரிவினர் மத்தியில் உணவுத்தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கலாம்.இது முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கவேண்டிய பிரச்சினையாகும். மூலோபாய உணவுக்கையிருப்புக்களை விடுவிப்பது கையாளக்கூடிய வழிமுறைகளில் ஒன்று.வேலைவாய்ப்பு திட்டங்களும் உணவு விநியோகமும் மற்றைய வழிமுறைகள்.ஏற்றுமதித்தடைகள் பிராந்தியத்தின் உணவு விநயோகச்சங்கிலி தொடர்களை  மேலும் சீர்குலைக்கும் என்பதால் அவை எதிர்மறையான பின்விளைவுகளைக் கொண்டுவரும்.

   கேள்வி ;  படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பிரிவாக    சேவைகள் துறையை உலகவங்கி அடையாளம் கண்டிருக்கிறது.உதாரணமாக, சுற்றுலாத்துறையை கூறலாம்.மாலைதீவு அதன் பெரிய வருவாய் இழப்பை  சந்திக்கப்போகிறது.இந்த துறைகளில் தொழில்வாய்ப்புக்களை மீள உருவாக்குவதற்குபுதிய வழிமுறைகளை தெற்காசியா பரிசீலிக்கமுடியுமா? அல்லது வருவாய்களுக்காக வேறு துறைகளுக்கு திரும்பவேண்டுமா?

  பதில் ; இரு மார்க்கங்களும் சாத்தியமானவை.பயன்தச்கூடிய தடுப்புமருந்து பரவலாக  கிடைக்கக்கூடிய நிலை உருவாகும்வரை, சுற்றுலாத்துறை வழமைநிலைக்கு திரும்பப்போவதில்லை.பாதுகாப்பான உல்லாசத்துறைக்கு பெரும்கிராக்கி ஏற்படும்.பல தீவுக்கூட்டங்களைக்  கொண்ட மாலைதீவுக்கு அது நல்ல வாய்பாக அமையலாம். அத்துடன் உல்லாசப்பயணிகளை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி பெரியளவிலான மக்கள் கூட்டத்தில் இருந்து விலக்கிவைத்திருக்கவேண்டியிருக்கும். தொலைக் கற்றல் அல்லது தொலைச் சேவைகள் மற்றும் ஈ -- வர்த்தகத்தில் விற்பனைப்பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்கு டிஜிட்டல் சேவைகளுக்கு கிராக்கி ஏற்படலாம்.சுற்றுலாத்துறைக்கு வெளியே கூடுதலான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடியது  சாத்தியப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13