கொரோனாவை கட்டுப்படுத்தாமல் பொதுத்தேர்தலை ஒரு போதும் நடாத்த மாட்டோம் - கம்மன்பில

Published By: Digital Desk 3

20 Apr, 2020 | 01:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் பொதுத்தேர்தலை அரசாங்கம் ஒரு போதும் நடத்தாது. மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாமல் அரசாங்கம் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு பொதுத்தேர்தலை நடத்த முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி  மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் ஒருபோதும் பொதுத்தேர்தலை நடத்தாது  என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி நிர்ணயித்த திகதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ளது. தேர்தலை பிற்போடும் போது தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தும் திகதியை அறிவித்திருக்க வேண்டும். ஒரு சில விடயங்கள் இன்று பலதரப்பட்ட சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அனைத்தும் சட்ட ரீதியாக தீர்வு காணப்படும்.

மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் பொதுத்தேர்தல் ஒருபோதும் இடம் பெறாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51