வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

20 Apr, 2020 | 12:00 PM
image

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர்.

இதன்போது வவுனியா பிரதேச செயலகத்தின் வாயிலில் தேவையின் பொருட்டு வரும் மக்களை ஒழுங்கமைப்பு செய்வதற்காக நுழைவாயிலில் இலக்கம் வழங்கப்பட்டு மக்கள் சீராக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கைகளை கழுவி செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஏனைய அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்கள் கணிசமாக வருகை தந்திருந்ததுடன் ஏனைய மாவட்டங்களுக்கு சென்றிருந்த உத்தியோகத்தர்கள் கணிசமாக சமூகமளித்திருக்கவில்லை.

வவுனியா மொத்த வியாபார மரக்கறி சந்தையில் மரக்கறிகள் அதிகளவில் குவிந்து காணப்பட்டதுடன் அவை வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை பேரூந்து சேவையின் வவுனியா சாலையினால் உள்ளுர் சேவைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதுடன் மன்னார் மற்றும் முல்லைத்தீவுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரம் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக மரக்கறி உட்பட ஏனைய வியாபாரங்களும் இடம்பெற்று வந்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30