சட்டத்தரணி ஹிஜாஸ் உள்ளிட்டோரின் கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்

19 Apr, 2020 | 08:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், வெறும் தொலைபேசி தொடர்புகளை மையபப்டுத்திய விடயங்களுக்காக மட்டுமோ அல்லது,  அவரது சட்டத்தரணி தொழில்  ரீதியிலான தொடர்புகளுக்காகவோ கைது செய்யப்படவில்லை எனவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த உறுதியான நியாமான ஆதாரங்களின் கீழான சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். 

அரச தகவல் திணைக்களத்தில் விஷேட செய்தியாளர் சந்திப்பொன்றினை நடாத்தியே அவர் இதனைத் தெரிவித்தார். 

சமூகவலைத் தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் சட்டத்தரணி ஹிஜாஸின் கைது குறித்தும் ஏனைய சந்தேக நபர்கள் சிலரின் கைது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை நிராகரிப்பதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும்  கலந்துகொண்டிருந்தார். 

இதன்போது பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய கூறியதாவது,

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அண்மையில் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைது தொடர்பில் பல்வேறு  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத் தளங்களில் பரிய எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெறுமனே தொலைபேசி அழைப்புகளுக்காக கைதுசெய்யப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. மேலும், கைதில் உள்ளடங்கும் சட்டத்தரணியை, அவர் தனது சேவையாளர் தொடர்பில் வழக்குகளில் ஆஜரானமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்படுகின்றன.  இந்த விமர்சனங்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எவரையும் வெறுமனே, ஒரு தொலைபேசி அழைப்பு இருந்தது என்பதற்காகவோ, அல்லது தனது சேவை பெறுநர் தொடர்பில் தொழில் ரீதியாக முன்னிலையானமை தொடர்பிலோ கைது செய்யப்படவில்லை.

 மிகத் தெளிவான ஆதாரங்களின் கீழேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுதாரிகளுடன் இணைந்து, அமைப்புக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் எமது விசாரணைகளில் அவதானம்  செலுத்தப்பட்டுள்ளன.

வெறுமனே தொலைபேசி அழைப்புக்களை மட்டும் நாம் பார்க்கவில்லை.  தொலைபேசி அழைப்புக்களுக்கு மேலதிகமாக, அவர்கள் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவை அறிவியல் தடயங்கள் ஊடாக கண்டறியப்பட்டு, நியாயமான சந்தேகத்தின் பேரிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன ' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30