சஹ்ரானின் பயங்கரவாத கும்பல் பிளவுபட்டமை ஏமாற்று நாடகம் ! இலங்கையை தெற்காசியாவின் இரகசிய இல்லமாக பயன்படுத்த மேற்கொண்ட சதியும் அம்பலம் - பொலிஸ் பேச்சாளரின் திடுக்கிடும் தகவல்கள்

Published By: J.G.Stephan

19 Apr, 2020 | 08:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சி.ஐ.டி.விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த தாக்குதல்களை நடாத்த சில நாட்களுக்கு முன்னர், அந்த தாக்குதல்களின் பிரதானியாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரானின் கும்பல், கருத்து வேறுபாடால் இரண்டாக பிளவுபட்டதாக விசாரணையாளர்கள் கண்டறிந்த நிலையில், அந்த பிளவானது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றினை நடாத்தும் நோக்கில் உளவுத் துறையினரையும் விசாரணையாளர்களையும் திசை திருப்பும் நாடகம் என்பது தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று விஷேட செய்தியாளர் சந்திப்பொன்றினை  சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவுடன் நடாத்திய அவர் இதனை வெளிப்படுத்தினார்.

' கடந்த ஆண்டி ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இதன்போது 2 ஆம் கட்ட தாக்குதல் ஒன்றிணை நடாத்த சஹ்ரான் கும்பல் திட்டமிட்டிருந்தமை  அப்போதே வெளிப்படுத்தப்பட்டது.  இந்நிலையில் அது குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரானின் கும்பல் 2 ஆக பிரிந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டன. அந்த பிரிவானது திட்டமிட்ட வகையிலேயே இடம்பெற்றுள்ளது. உளவுத் துறையையும்  விசாரணையாளர்களையும்  திசை திருப்ப  அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர்  ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அத்துடன்  இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், தெற் காசிய நாடொன்றில் தாக்குதல் ஒன்றினை நடாத்திய பின்னர், வெளிநாட்டில் உள்ள சில பயங்கரவாதிகள் இலங்கையை அவர்களது பாதுகாப்பு இல்லமாக பயன்படுத்த வைத்திருந்த இரகசிய திட்டங்கள் பலவும் அம்பலமாகியுள்ளதாகவும்  பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அத்துடன் 2 ஆம் கட்ட தாக்குதலை நடாத்த முன்னர் திட்டமிட்டிருந்த பலரும் சி.ஐ.டி.யினரின் கைதில் உள்ளதாகவும் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 ' இஸ்லாம் மதத்தை தவறாக விளக்கப்படுத்தி,  அதன்பால் முஸ்லிம் சமூக இளைஞர்களை  ஈர்த்து,  தீவிரவாதம் போதிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

 தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவர் கூட,  அவ்வாறு  அடிப்படைவாதத்தை முஸ்லிம் இளைஞர்களிடையே போதிக்க, அமைப்புக்களை உருவாக்கி அதில்  குண்டுதாரிகளுடன் இணைந்து தலைமையேற்று செயற்பட்டுள்ளமையின் தொடர்பில்  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய அத்தகைய சான்றுகளும் ஏதுவாகின. 'என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வா­பிட்டி - புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இதனைவிட  கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது. ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந் நிலை­யில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக  உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும்  சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம்  பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல்  2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகளை இலக்கு வைத்து  தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால்  தாக்குதல் நடாத்தப்பட்டது.

 இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

 தற்போது  அந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத்  திணைக்களத்தினரும் சி.ரி.ஐ.டி.எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரும் இதுவரை 197 பேரைக் கைது செய்துள்ளனர். அதில் 119 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும்  கைது செய்யப்பட்ட 197 பேரில் 90 பேர் தற்போது இவ்விரு பொலிஸ் விசாரணைப் பிரிவுகளிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17