டோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து அசாருதீனின் கருத்து

19 Apr, 2020 | 08:50 PM
image

ஐ.பி.எல். போட்டிகள் நடக்காததால் மஹேந்திர சிங் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது இலகுவான விடயமாக இருக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் அஸாருடீன் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு தெரிவு செய்யப்படுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநரான ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

ஐ.பி.எல். போட்டிகளும் நடக்காததால் 38 வயதான டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் டோனி விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் அசாருதீன் தெரிவித்துள்ளதாவது,

‘டோனி அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதை என்னை விடவும், அவரே கூறவதுதான்  சிறந்ததாக இருக்கும். இது அவருடைய சொந்த விருப்பம். கொரோனா வைரஸ் பரவலால் இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியாக இல்லை. அதனால் ஐ.பி.எல். போட்டிகளும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இத்தகைய பிரச்சினை எல்லாம் சரிவருவதற்கு சற்று நாட்கள் எடுக்கும். அதே நேரத்தில் தோனியை பொறுத்தவரை இது அவருடைய தனிப்பட்ட முடிவு தான். அவர் இந்திய அணிக்கு திரும்புவது இலகுவான விடயமல்ல.

அப்படியே வாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், தெரிவாளர்கள் நிச்சயம் அவரது திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். ஏனெனில் அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருந்து வருகிறார். பயிற்சி பெறும் விதமாக போட்டிகளில் விளையாடுவது (உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போன்றவை) உண்மையிலேயே மிகவும் முக்கியம். ஒருவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து ஓரளவு கிரிக்கெட் விளையாட வேண்டும். பயிற்சி மேற்கொள்வது என்பது வேறு, களத்தில் இறங்கி போட்டிகளில் விளையாடி அதன் மூலம் பயிற்சி எடுப்பது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09