ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Vishnu

19 Apr, 2020 | 04:38 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் தொடர்பிலான பரிசோதனைகள் நாளொன்றுக்கு 3000 என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் பின்னர் சமூக இடைவெளியை படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இன்று விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இந்த கோரிக்கையை விடுத்திருக்கும் அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :

கொரோனா வைரஸ் தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் துரிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இலங்கையில் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் சமூக இடைவெளி பேணப்பட்டது. இதன் காரணமாக தற்போது வைரஸ் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இந்த நிலைமையைப் பேணுவதற்கு சமூகத்திலுள்ள வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட வேண்டும்.

இந்நிலையில் தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி கூற வேண்டியது முக்கியமானது என்று நான் கருதுருகின்றேன்.

இந்த நாடுகள் நோயாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை முடிந்தளவு அதிகமாகவே செய்கின்றன. அத்தோடு இந்த நாடுகள் தனித் தனித் பரிசோதனைகளைப் போன்று கூட்டு பரிசோதனைகளையும் முன்னெடுக்கின்றன. இதன் மூலம் கூடுதலாக நோயாளர்கள் இனங்காணப்படுகின்ற அதே வேளை வைரஸ் பரவுகின்றமையையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தவும் முடிகிறது. இவ்வாறு கூடுதலான நோயாளர்களை இனங்காண்பதன் மூலம் வைரஸ் பரவலினைக் துரிதமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனமும் கூறியுள்ளது.

இது வரையில் எமது நாட்டில் முன்னெடுக்கப்படும் பரிசோதனை அளவு ஆயிரத்தை விடக் குறைவாகும். எனினும் குறைந்தளவு நாளொன்றுக்கு 3000 பரிசோதனைகளையேனும் முன்னெடுக்கும் இலக்கிற்கு நாம் செல்ல வேண்டும். இது வரையில் இலங்கையின் சுகாதாரத்துறையினரிடம் காணப்பட்ட வசதிகள் கூடியளவு இதற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்காக தனியார் துறைகளையும் சுகாதார சேவையினுள் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயுமாறு நான் முன்னரும் வலியுறுத்தியிருந்தேன்.

தற்போது எமது நாட்டில் வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும்இ இரண்டாம் கட்டத்துக்குச் செல்வதற்கான சந்தர்ப்பத்தினை எம்மால் கடக்க முடியாது. அதே போன்று நோயாளர்கள் இரண்டாம் கட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய சில தொழிற்சங்கத்தினர் எமது நாட்டில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நோய் அறிகுறிகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர். இதன் உண்மைத் தன்மை பற்றி நான் அறியவில்லை. எனினும் அவ்வாறான நிலைமைக்கு அல்லது அதனை விடவும் அபாயகரமான நிலமைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்க வேண்டும்.

இது வரையில் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வாவினுடைய குழுவும்இ மருத்துவ தொழில்சார் நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட பல இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளன. அவை அனைத்தையும் ஆராய்ந்து நாளொன்றுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பரிசோதனைகளின் எண்ணிக்கை 3000 ஆக அதிகரிப்பதற்கான இலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

அதனைச் செய்வதோடு மாத்திரமின்றி சமூக இடைவெளியை சிறிது சிறிதாக தளர்த்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோருகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38