கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை - எச்சரிக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்

19 Apr, 2020 | 02:54 PM
image

கொரோனா வைரஸ்க்கு எதிரான சமூக தொலைதூர விதிகளை தளர்த்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைக்கு அமைய “கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று (Antibody)  சோதனைகள் காட்டுகின்றன” என்பதற்கு 'எந்த ஆதாரமும் இல்லை' என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

பிறபொருளெதிரி (Antibody)  இரத்த பரிசோதனைகள் மூலம் நேயாளியின் கொரோனா வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அறிய முடியும் என்று நாடுகளின் அரசாங்கங்கள் நம்புகின்றன.

வைரஸால் குணமடைந்தவர்கள் அல்லது பாதிப்புள்ளாகாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என உறுதிசெய்யப்பட்டால், அது முடக்குதலில் உள்ள நாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும்.

எனினும் இந்த செரோலாஜிக்கல் சோதனைகள் கொவிட் 19 தொற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவரின் நோய் எதிர்ப்பு சக்தியை நிரூபிக்கவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரிக்கிறது

இதேவேளை இப் பரி சோதனைகள் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை மட்டுமே வெளிப்படுத்துகின்றன என்று உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில், இதுவரை 738,792 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியும் 39,014 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை சமூக தொலைதூர நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் வாழ்க்கை - மற்றும் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு இட்டுச்செல்ல, மாநிலங்கள் சோதனைகளின் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்க வேண்டும், என பரிந்துரைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17