தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து 

19 Apr, 2020 | 03:30 PM
image

அன்னை பூபதியின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில் நினைவுகூருவதற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பொலிசார் தடைவிதித்துள்ள நிலையில் அவரது மகள் தனது வீட்டில் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து உணர்வுபூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தார்.

கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினைரை வெளியேற பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கம் ஆலய முன்றலில் அன்னையர் முன்னணி தலைமையில் அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.

இந்த நிலையில் இன்று அன்னை பூபதியம்மாவின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வை அவரது சமாதியில் நினைவு கூருவதற்கு அவரது மகள் ஏற்பாடுகளை செய்வதற்கு பொலிஸாரிடம் அனுமதி கோரிய நிலையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலையில் மாமாங்கத்திலுள்ள பூபதியம்மாவின் மகளின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் வழங்கிய அனுமதியை நாட்டின் சூழ்நிலை காரணமாக ரத்து செய்துள்ளனர். 

இதன் காரணமாக இன்றை தினம் அன்னை பூபதியின் நினைவேந்தலை செய்யமுடியாமல் போயுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை காலையில் குறித்த சமாதியில் நினைவேந்தல் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும் அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி  தெரிவித்தார். 

இந்த நிலையில் அன்னை பூபதியின் மகள் தனது வீட்டில் அன்னையின் உருவப்படத்திற்கு மார்மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54