“பொதுமக்கள் பாதுகாப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ”

Published By: Vishnu

19 Apr, 2020 | 12:17 PM
image

(இராஐதுரை ஹஷான்)

நாட்டில் கொரோனா வைரஸ் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. இருப்பினும் அனைத்து சவால்களையும் எதிர்க்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்பதால் ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

முஸ்லிம் சமுகத்தை தொடர்புப்படுத்தி எதிர்தரப்பினர் எதிர்தரப்பினர் குறிப்பிடும் செய்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரது இறுதி சடங்குகள் முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெறவில்லை. என ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் மாறுபட்ட  கருத்துக்களை ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் இறுதி கடமைகள் செய்ய முடியாமல் போனது. இதில் நான்கு சமயத்தவர்களும் உள்ளடங்குகின்றார்கள். ஆகவே நெருக்கடி நிலைமையினை கருத்திற் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். என பிரதமர் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தார்.

கொரோனா வைரஸ் ஊடாக எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தவரை தொடர்புப்படுத்தி எதிர்தரப்பினர் குறிப்பிடும் செய்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து இன மக்களும் வேறுப்பாடுகளின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களின் இயல்பு வாழ்க்கை மே மாதம் முதல் வாரத்தில்  இருந்து வழமைக்கு கொண்டுவரப்படும்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கடினமான முறையில் தொடர்ந்து செயற்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை.அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள வேண்டும். என்பதற்காகவே ஊரடங்கு சட்டம் பகுதியளவில் நீக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32