முடக்கல் நிலைக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள்

19 Apr, 2020 | 10:00 AM
image

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முடக்கல் நிலைக்கு எதிராக அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

டெக்சாஸ் மேரிலாண்ட் உட்பட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

டெக்சாஸ் தலைநகரில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக கூடி கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பௌசியை நீக்குங்கள் என அவர்கள் கோசமிட்டுள்ளனர். அன்டொனி பௌசி கொரோனா வைரஸ் தொடர்பான வெள்ளை மாளிகையின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேரிலாண்டில் கார்களிற்குள் இருந்த படி நகரத்தினை சுற்றிவந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேரிலாண்டை மீள திறவுங்கள் என அவர்கள் கோசமிட்டுள்ளனர்.

கொலம்பசிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன, நாங்கள் ஆட்டு மந்தைகள் இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டுள்ளனர்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பரந்துபட்ட முடக்கல் நிலை காரணமாக பெருமளவு அமெரிக்க மக்கள் வேலைவாய்புகளை இழந்துள்ளனர்.

அடுத்த சில மாதங்களிற்கு மேல் தங்களின் சிறிய வர்த்தகம் தாக்குப்பிடிக்காது என பல அமெரிக்கர்கள் கவலையடைந்துள்ளனர்.

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

எனினும் முடக்கலை உடனடியாக விலக்கவேண்டிய அவசியமில்லை என பெரும்பான்மையினர் கருதுவது கருத்துக்கணிப்புகளின் மூலம் புலனாகியுள்ளது. 

கருத்துக்கணிப்பொன்றில் கலந்துகொண்ட மூன்றில் இரண்டுபேர் மாநில அரசாங்கங்கள் விரைவாக முடக்கல் நிலையை தளர்த்தலாம் என்பது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குடியரசுக்கட்சியின் மத்தியில் இது குறித்து குழப்ப நிலை காணப்படுகின்றது, கட்சியின் 51வீதமான ஆதரவாளர்கள்  முடக்கல் நிலை விரைவில் அகற்றப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை வலதுசாரி ஊடகங்களும் அமெரிக்க ஜனாதிபதியும்  ஆர்ப்பாட்டங்களை தூண்டும் விதத்தில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17