பிறந்தநாள் கொண்டாட்டங்களை இரத்து செய்தார் எலிசபெத் மகாராணி

18 Apr, 2020 | 07:18 PM
image

பிரிட்டனின் எலிசபெத் மகாராணி தனது 94வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இரத்துசெய்துள்ளார். நாடு மோசமான கொரோனா வைரசின் பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவசியம் இல்லை என கருதியே  அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் பிறந்தநாள் விசேடமாக கொண்டாடப்படாது,வழமையான  மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படல்  இம்முறை காணப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசகுடும்பத்தினரின் பிறந்தநாட்கள் உட்பட விசேட தினங்களை குறிப்பதற்காக பிரிட்டனின் பல பகுதிகளில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுவது வழமை.எனினும் இம்முறை இதற்கான விசேட ஏற்பாடுகள் தேவையில்லை எனவும் இந்த தருணத்தில் அவ்வாறான ஏற்பாடுகள் பொருத்தமற்றவை எனவும் மகாராணி கருதுகின்றார் என அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

68 வருட ஆட்சியில் எலிசபெத் மகாராணி இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளமை இதுவே முதல் தடவை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்கள் மகாராணியின் பிறந்தநாளை  கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக எவ்விதத்திலும் விசேடமாக கொண்டாடப்போவதில்லை, என ஐடிவியின் செய்தியாளர் கிறிஸ் சிப் தெரிவித்துள்ளார்.

மகாராணியின் வேண்டுகோளை அவர் தனது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17