மரம் முறிந்து வீழ்ந்ததில் வாகனங்கள், வீடுகள், கட்டிடங்கள் சேதம்

Published By: Robert

24 Jun, 2016 | 09:24 AM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை தோட்டத்தில் பலத்த காற்று வீசியதன் காரணமாக பழமைவாய்ந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கோவில், தனியார் நிறுவனத்தின் இரண்டு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டர் சைக்கிள் இரண்டும் சேதமாகியுள்ளது. 

இதில் கோவில் மற்றும் கட்டிடம் ஒன்றும் முற்றாகவும், மேலும் கட்டிடம் ஒன்றும் இரண்டு வீடுகள் மற்றும் வாகனங்களும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் கட்டிடங்கள் மற்றும் ரோதமுனி ஆலயம் என்பன முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக அதிக வலு கொண்ட மின்சார கம்பங்களும் உடைந்து விழுந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை ஹட்டன் மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பழமைவாய்ந்த மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் ஹட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03