‘எப்போதும் பறக்க விரும்பிய’ சிறுவன் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து பலி

Published By: Digital Desk 3

18 Apr, 2020 | 01:26 PM
image

கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திலுள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் 16 ஆவது மாடியில்  இருந்து விழுந்து சிறுவன் ஒருவன்  உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரத்தைச் சேர்ந்த குடும்பம் விடுமுறையை கழிக்க புளோரிடா மாகாணத்திலுள்ள  “குவாடோமைன் கொண்டோமேனியம்” குடியிருப்பு கட்டிடத்தின் 16 ஆவது மாடியில் தங்கியிருந்துள்ளார்கள்.

இந்நிலையில், குறித்த குடும்பத்தைச் சேந்த  4 வயதான ஜெஸ்ஸி என்ற சிறுவன் மாடியில்  இருந்து விழுந்து உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஜெஸ்ஸி தனது பெற்றோர், இரட்டை சகோதரர் மற்றும் அத்தை ஆகியோருடன் 16 ஆவது மாடியில் இருந்துள்ளார்.

அவ்வேளை , ஜெஸ்ஸியின் 51 வயதான தந்தை ஜெஸ்ஸியின் படுக்கையறையில் திரையிடப்பட்ட ஜன்னலை காலை வேளை திறந்து காற்று உள்ளே வர வைத்தார்.

பின்னர் தந்தை அறையிலிருந்து வெளியேறினார், சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தபோது, ஜன்னலில் இருந்த திரை 'ஓரளவு வளைந்திருப்பதை' கவனித்தார், எனவே அவர் அதை அகற்றி, ஜன்னலை மூடினார்.

பின்னர், ஜெஸ்ஸியின் அத்தை படுக்கையில் திரை கிடப்பதைக் கண்டு ஜன்னலைத் திறந்த போது, அவரது மருமகன் கீழே தரையில் கிடப்பதைக் கண்டார்.

உடனே கீழே சென்று பார்த்த போது, ஜெஸ்ஸி கீழே இறந்து கிடந்துள்ளான். 

இந்நிலையில் பிரதே பரிசோதனையில், குறித்த சிறுவனின் மரணம் தற்செயலானது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெஸ்ஸியின் தாய் தனது மகன் எப்போதும் பறக்க விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52