ஆதரவற்ற பெண் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்த பொலிஸார்

17 Apr, 2020 | 11:00 PM
image

இந்தியாவில், ஊரடங்கு சமயத்தில் இறந்த ஆதரவற்ற பெண்ணின் உடலுக்கு, இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்த போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வரும் 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தின் கிஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவர், உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தார்.

குடும்பம் மற்றும் உறவினர் யாரும் இன்றி தனியே வசித்து வந்ததால், மீனாவின் உடலுக்கு, இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்வதற்கு கூட யாரும் முன்வரவில்லை.

இது குறித்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரிக்கு தகவல் தெரிந்துள்ளது.

இதையடுத்து அவர், சில பொலிஸாரை அழைத்து வந்து மீனாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போலீஸாரே மீனாவின் உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரி மற்றும் போலீஸாருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17