கொரோனாவுக்கு மருத்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளி தேவை - அவுஸ்திரேலிய பிரதமர்

Published By: Digital Desk 3

17 Apr, 2020 | 08:06 PM
image

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முழுமையாக மருத்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளி ஒருவருடம் வரை கடைப்பிடிக்க வுண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானொலி ஒன்றுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அளித்த நேர்காணலில் கூறும்போது,

“ சமூக விலகலை கடைப்பிடிக்கும் எதிர்காலத்திற்கு நாம் பழக வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் வரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு ஒருவருடம் கூட ஆகலாம். ஆனால் அதனை பற்றி நான் இப்போது ஊகிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அந்நாட்டு அரசு புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப கண்காணிப்பு செயலியை உருவாக்கி வருகிறது.

"மக்கள் இந்த பயன்பாட்டை எடுத்துக் கொண்டால், யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினால், அவர்களினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை மிக விரைவாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இப்போது, நாங்கள் அதைச் செய்ய முடியாவிட்டால், எங்களுக்கு அந்த திறன் இல்லையென்றால், பின்னர் நாங்கள் கட்டுப்பாடுகளை நீண்டகாலம் வைத்திருக்க வேண்டும், " என்று மேலும் தெரிவித்தார்.

இதுவரை அவுஸ்திரேலியாவில் 6,522 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 66 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17