சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என உறுதிப்படுத்தும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் - பொதுபலசேனா

Published By: Vishnu

17 Apr, 2020 | 06:55 PM
image

(நா.தனுஜா)

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படும் வரை அவர் சட்ட மற்றும்  நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று  நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதம நீதியரசர் ஜயந்ந ஜயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டிருக்கிறார். 

அவர் குண்டுதாரிகள் இருவருடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவர்களுடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களிலும் வெவ்வேறு பதவிகளை வகித்ததாகவும் அதுமாத்திரமன்றி குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டத்திலும் பங்குகொண்டதாகச் சந்தேகிப்பதாக கடந்த 15 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவி தெரிவித்தது.

நபரொருவர் குற்றவாளி என்பது நிரூபணமாகும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படவேண்டும் என்பதை நாமறிவோம்.

எனினும் இந்த சட்டத்தரணியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு விசாரணைகளின் பின்னர் அவர் நிரபராதி என்பது நீதிமன்றத்தினால் உறுசெய்யப்படும் வரையில் அவரை சட்டத்துறையில் பணியாற்ற அனுமதிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கருதுகின்றோம்.

அதுமாத்திரமன்றி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நிரபராதி என்பது நிரூபணமாக முன்னர் அவர் தனது தொழிலில் ஈடுபட அனுமதியளிக்கும் பட்சத்தில் மக்கள் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே அவரது குற்றமற்ற தன்மை உறுதியாகும் வரை அவர் சட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08