ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த முன் நிலைமைகளை ஆராய அவகாசம் தாருங்கள் - தொற்றுநோய் தடுப்புப் பிரிவு

Published By: Vishnu

17 Apr, 2020 | 06:42 PM
image

(ஆர்.யசி)

ஊரடங்கு சட்டத்தை தளர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவரசப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றாலோ அல்லது கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தாலோ நாட்டின் நிலைமைகள் மிக மோசமாக அமையும். எனவே மேலும் ஒருவார கால அவகாசம் வழங்கி நிலைமைகளை ஆராய அனுமதிக்க வேண்டும் என தொற்றுநோய் தடுப்பும் பிரிவு அரசாங்கத்தை கோருகின்றது. 

ஊரடங்கு சட்டத்தை தளர்ப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை பெற்று வருகின்ற நிலையில் நிலைமைகள் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் தீபா கமகே கூறுகையில்,

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுநோய் தாக்கத்தில் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய துரித பரிசோதனை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அதிக பரிசோதனை மையங்களை அமைத்து அதிகளவில் மக்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அது மட்டுமல்லாது இப்போது தொற்றுநோய் தடுப்புப்பிரிவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் குறித்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

வெளி மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் இருந்து இதே முறைமையிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

அடுத்த வாரமளவில் நாம் முன்னெடுக்கும் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அவதானித்தே  நாட்டில் நோய்த்தாக்கம் எந்த மட்டத்தில் பரவியுள்ளது என்பது குறித்த ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வர முடியும்.

இப்போதுள்ள நிலைமையில் நாட்டின் சுகாதார தன்மைகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சரியாக இருந்தாலும் கூட நாடு தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை எம்மால் கூற முடியாது. 

அவ்வாறு கூறும் வரையில் வேறெந்த நடவடிக்கைகளையும் எவரும் முன்னெடுக்கவும் முடியாது. இவ்வாறான நோய்கள் நாளுக்கு நாள் மாறுபட்ட பெறுபேறுகளை காட்டுகின்றது. இந்த வாரம் இருக்கும் நிலைமை அடுத்த வாரம் இருக்குமா என கூறமுடியாது. எனவே ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட வேண்டும் என எம்மால் இப்போது அறிவுரைகளை கூற முடியாது.

வெகு விரைவில் இந்த நிலைமைகளை மாற்றியமைத்து மக்களுக்கான இயல்பு வாழ்கையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் நாமும் கவனம் செலுத்துகின்றோம். ஊரடங்கு சட்டம்  அகற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து அதற்கு செய்யவேண்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றோம். 

ஆனால் தொற்றுநோய் அச்சுறுத்தல் உள்ளதால் எம்மால் இஸ்திரமான அறிவிப்பொன்றை வழங்க முடியாதுள்ளது. ஊரடங்கு சட்டத்தை தளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாம் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால் அதனால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றால் மீண்டும் நாம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். 

இரண்டாம் கட்ட தாக்கம் நாம் நினைத்ததை விடவும் மோசமாக அமையலாம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து  எமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க நேரிடும். எனவே எமக்கு சற்று கால அவகாசம் தரவேண்டும் எனவும், நிலைமைகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் நடவடிக்கை ஏதேனும் எடுக்க முடியும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58