மத்திம வயதுக்காரர்களை அச்சுறுத்தும் “அதிறோஸ்கிளிறோஸிஸ்”

17 Apr, 2020 | 04:02 PM
image

இன்று coronary heart disease எனப்படும் இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இதற்கு அதிறோஸ்கிளிறோஸிஸ் (Atherosclerosis) என்ற இதய பெருந்தமனி ரத்த நாளம் இயல்பான அளவை விட கூடுதலாக தடிமனடைவதே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிலும் குறிப்பாக மத்திம வயதுகாரர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகமாக ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

எம்மில் பலருக்கு நெஞ்சு வலி, பலவீனம், தலைச்சுற்றல், தோள்பட்டை வலி, சுவாசித்தலில் கோளாறு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும்.  உரிய நேரத்தில் கவனியாது இருந்தால் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும். 

அதிறோஸ்கிளிறோஸிஸ் எனப்படும் இத்தகைய பாதிப்பு, மத்திம வயதுகாரர்களான 40 வயது முதல் 50 வயது கொண்ட அனைவருக்கும், அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை இதய பாதிப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவு குறித்தும், இதய பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட நல்ல கொழுப்பான ஹெச்.டி. எல் கொலஸ்ட்ராலின் அளவு குறித்தும் முறையான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய பரிசோதனையின் முடிவில் நாளடைவில் அதிறோஸ்கிளிறோஸிஸ் எனப்படும் இதய பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பதை துல்லியமாக அவதானித்து, அதனை தடுப்பதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள், தங்களது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், உடல் எடை அதிகமானவர்கள் மற்றும் உடல் பருமன் உடையவர்கள், எச்சரிக்கையுடன் உடல் எடையை குறைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான, சமச்சீரான ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அத்துடன் பரம்பரை காரணமாக உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இத்தகைய பாதிப்பு இருந்தால். உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு, இத்தகைய பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

வைத்தியர் துர்கா தேவி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04