தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3721 பேர் விடுவிப்பு ! 

Published By: Vishnu

17 Apr, 2020 | 12:37 PM
image

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவர்கள் மீதான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

இதவேளை கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் காணொளி பதிவு 16 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அந்த பதிவில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாவது,

“கடந்த சில நாட்களில் , ஜாஎல - சீதுவெல்ல பகுதிகளில் பல கொவிட்-19 தொற்றுக்குள்ளான நபர்கள் இனங்காணப்பட்டனர்.

அவ்வாறு தொற்றுக்குள்ளான கிரேண்ட்பாஸ், நாகலகம் வீதியில் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 118 நபர்கள் சாம்பூர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இப்பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக நாகலகம் வீதி பகுதி 16 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

பனிச்சங்கேணி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட 20 நபர்கள் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் நேற்று தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

தற்பொழுது, முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 1631 நபர்கள் தனிமைப்படுத்தல்களில் உள்ளதுடன், முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 3721 நபர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

80 பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன, அதில் எவருக்குமே நோய் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு பின்னர் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக, வைத்தியர்கள் மற்றும் தாதி குழாம் வைக்காலில் உள்ள டொல்பின் ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் தொடர்ந்தும் உள்ளனர். அங்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்த மற்றுமொறு குழுவினர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13