பரிசோதனை மருந்தினால் பலன் - சிஎன்என்

17 Apr, 2020 | 08:01 AM
image

ரெம்டெஸ்விர் என்ற பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட கொவிட் 19 நோயாளிகள் நோயிலிருந்து வேகமாக மீண்டுள்ளனர் என ஸ்டட் நியுசினை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன, கடுமையான சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இந்த மருந்து வழங்கப்பட்டது என சிஎன்என்  தெரிவித்துள்ளது.

ரெம்டெஸ்விர் வழங்கப்பட்டவர்களால் ஒரு வார காலத்தில் நோயாளிகளால் மருத்துவமனையிலிருந்து வெளியேற முடிந்தது என இந்த பரிசோதனைக்கு தலைமை தாங்குகின்ற மருத்துவர் ஸ்டட்டிற்கு தெரிவித்துள்ளார் எனவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் நோயாளிகளில் அனேகமானவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்பதே சிறந்த செய்தி என தெரிவித்துள்ள இந்;த மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைளிற்கு தலைமை தாங்கும் மருத்துவர் கதிலீன் முலானே,இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் சிக்காக்கோ பல்கலைகழகத்தின் தொற்றுநோய் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மருத்துவ பரிசோதனையின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியானதும் உத்தியோகபூர் அறிவிப்பு வெளியாகும் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

கிலியாட் சயன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டெஸ்விர் எபோலா நோயாளிகள் மத்தியில் பரிசோதிக்கப்பட்ட வேளை வெற்றியளிக்கவில்லை என்பது குறி;ப்பிடத்தக்கது.

எனினும் கொவிட் 19 உடன் தொடர்புபட்ட கொரோனா வைரசினை இந்த மருந்தினால் குணப்படுத்த முடியும் என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10