இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் இந்திய அணியின் சுழற் பந்தவீச்சாளர் அணில் கும்ளே இன்று (23) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களான சவ்ரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீ.வீ.எஸ் லக்ஸ்மன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்  அணில் கும்ளே தெரிவுசெய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் அனுரக் தாகூர் தெரிவித்தார்.

குறித்த பயிற்றுவிப்பாளர் தெரிவிற்கு அணில் கும்ளே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியமை குறிப்பிடத்தக்கது.