மத அடிப்படையில் கொரோனா வைரஸ் நோயாளிகளை பிரித்து குஜராத்தில் சிகிச்சை-இந்திய ஊடகம் செய்தி

16 Apr, 2020 | 10:19 PM
image

இந்தியாவின் குஜராத்தின்  அஹமதாபாத்தின் மருத்துவமனையொன்றில் கொரோனா நோயாளிகள் மதஅடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலால் சர்ச்சை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளும் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களும் அஹமதாபாத் சிவில் மருத்துவமனையில்  தனித்தனியாக பிரித்து அனுமதிக்கப்பட்டுள்ளனர்  என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இந்து நோயாளிகளிற்கு என ஒரு பகுதியும்  முஸ்லீம்களிற்கு என தனியான ஒரு பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி குன்வந் ராத்தோட் தெரிவித்துள்ளார்.

வழமையாக ஆண்நோயாளிகளும் பெண் நோயாளிகளும் தனித்தனியாக பிரித்து அனுமதிக்கப்பட்டு கிசிச்சை வழங்கப்படும் என தெரிவித்துள்ள அவர் ஆனால் நாங்கள் இந்துக்களை தனியாகவும் முஸ்லீம்களை  தனியாகவும் பிரித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்..

இதற்கான காரணத்தை கேட்டவேளை அவர் இது அரசாங்கத்தின் முடிவு அவர்களிடம் நீங்கள் காரணத்தை கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய மாநில அரசாங்கங்களை சேர்ந்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர்,பிரதி முதலமைச்சர் பட்டேல் இவ்வாறான முடிவுகள் குறித்து நான் அறிந்திருக்கவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புகொண்டவேளை நோயாளியொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாவது வோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட 28 நோயாளிகளின் பெயர்களை அறிவித்தார்கள் அதன் பின்னர் நாங்கள் வேறு வோர்ட்டிற்கு மாற்றப்பட்டோம் என தெரிவித்துள்ளார்.

எங்களை பிரிப்பதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை,ஆனால் பெயர் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட அனைவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

இரு சமூகத்தினரின் நன்மைக்காகவே இவ்வாறான நடவடிக்கை என மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் தெரிவித்தார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47